2024 மார்ச் 28, வியாழக்கிழமை

புதிதாக மூவருக்கு அமைச்சுப் பதவிகள்-தயா கமகேவின் பதவியில் மாற்றம்

Editorial   / 2019 ஜனவரி 11 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள் இருவரும், பிரதியமைச்சர் ஒருவரும் இன்று (11) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர்.

விசேட பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக வீ.இராதாகிருஸ்ணனும், தொ​ழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சராக ரவிந்திர சமரவீரவும் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை பிரதி அமைச்சராக அப்துல் மஹ்ருப் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  

 

இந்நிலையில் தயா கமகேவுக்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சுப் பதவியில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய, அவர் சமூக வலுவூட்டல் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X