2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பூஜித் ஜயசுந்தர தொடர்பான விசாரணை நிறைவு

Editorial   / 2020 ஜனவரி 08 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் தலைமையகத்தில் மின்தூக்கியை செயற்படுத்தும் ஊழியர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளது.

இதனை, குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் இன்று (08) அறிவித்துள்ளனர்.

2017ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவம் தொடர்பான  சி.சி.ரி.வி. காணொளி அந்தக்காலப்பகுதியில் இணையத்தளத்தில் வெளியாகியிருந்தது.

குறித்த காணொளியில் பொலிஸ்மா அதிபர் மின்தூக்கி ஊழியரின் சட்டையை பிடித்து உலுக்கி, மிரட்டும் தொனியில் நடந்துகொள்வதும் பதிவாகியிருந்தது.

இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துவந்த பொலிஸார், 2019 ஒக்டோபர் 01 ஆம் திகதி அவரை கைதுசெய்தனர்.

அதன்பின்னர்,  கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, அன்றைய தினம் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

எனினும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டில் அவர் மீண்டும் கைதுசெய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது,  அவருக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்வதாக அல்லது வேறு நீதிமன்றில் வழக்கு தொடர்வதாக என்பது குறித்து மார்ச் மாதம் 18ஆம் திகதி இறுதி அறிக்கையை கையளிப்பதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் மன்றில் இன்று (08) அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து, வழக்கு விசாரணை மார்ச் 18ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக கொழும்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் ரங்க திசாநாயக்க உத்தவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .