2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

பூஜித் - ஹேமசிறிக்கு எதிரான மனுக்கள் விசாரணைக்கு

Editorial   / 2019 ஜூலை 12 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை காரணமாக அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள் இன்றைய தினம் உயர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோருக்கு எதிராக இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.  

அதற்கமைய குறித்த மனுக்களை விசாரணை செய்வதற்காக ஏழு நீதியரசர்களை கொண்ட குழாம், கடந்த 8ஆம் திகதி பிரதமர நீதியரசர் ஜயந்த ஜயசூரியவால் நியமிக்கப்பட்டது.

அதன் தலைவராக  பிரதமர நீதியரசர் செயற்படுவதுடன், நீதியரசர்களான சிசிர த அப்று, புவனேக அலுவிஹார, பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன, எல்.டி.பி. தெஹிதெனிய மற்றும் முர்து பெர்ணான்டோ ஆகியோர் நீதியரசர்கள் குழாமில் அங்கம் வகிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X