2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பெருமளவிலான பெண்களின் கணவன்மார் தடுப்புக்காவலில்- சிவசக்தி ஆனந்தன்

Super User   / 2010 மே 23 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகந்தினி ரட்னம்

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பெரும் எண்ணிக்கையான பெண்களின் கணவன்மார் கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பதுடன், பல கணவன்மார் அங்கவீனமுற்றிருப்பதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சற்று முன்னர் தமிழ்மிரர் இணையதளத்திற்கு தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் மீள்குடியேற்றப்பட்ட பகுதியான  மல்லாவி  பிரதேசத்தின் தேராங்கண்டல், ஆலங்குளம். உயிலங்குளம், தென்னியான்குளம், ஐயன்குளம், பாண்டியன்குளம், நட்டாங்கண்டல், வவுனிக்குளம், பாலிநகர் மற்றும் சிவபுரம் ஆகிய மீள்குடியேற்றப் பகுதிகளுக்கான விஜயத்தினை இன்று மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில், அங்கு ஆண்கள்  குறைவாகக் காணப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

குறித்த பகுதிகளில் மீள்குடியேற்றப்பட்டிருக்கும் மக்களின் நிலைமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், மேற்படி மக்கள் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் வாழ்வாதாரப் பிரச்சினைக்கு முகம் கொடுத்திருப்பதாகவும் குறிப்பிட்டார். அத்துடன், சுகாதாரப் பிரச்சினை, சுயதொழிலில் ஈடுபட முடியாமை, மாணவர்கள் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான வசதியின்மை போன்ற பல்வேறு பிரச்சினைகளை இந்த மக்கள் எதிர்நோக்கியிருப்பதாகவும் சிவசக்தி ஆனந்தன் கூறினார். 

மேலும் இவர்களிடம் அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ், மரணச் சான்றிதழ்,  காணி அனுமதிப்பத்திரம் ஆகியன இல்லாமல் கஷ்டப்படுவதாகவும்  அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  நாளை கிளிநொச்சிக்கு செல்லவிருப்பதாகவும் சிவசக்தி ஆனந்தன் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X