2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘பொருளாதார வளர்ச்சிக்கு வர்த்தகர் ஆலோசனை’

Editorial   / 2019 பெப்ரவரி 14 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் ஆகியனவற்றை புனரமைப்புச் செய்து, பிராந்திய, வர்த்தக விமான சேவை, அதேபோல் பயணிகள், வர்த்தக கப்பல் சேவையை ஆரம்பிப்பதன் ஊடாகவே வடமாகாணம் பொருளாதார வளா்ச்சியடைய முடியும். அதற்கான கோரிக்கைகளை தமிழ் அரசியல்வாதிகள், அரசாங்கத்துக்கு வழங்கவேண்டுமென்ற கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது,

யாழ். ஊடக அமையத்தில் ஊடகவியலாளா்களை நேற்று (13) சந்தித்த போதே, யாழ்ப்பாண வா்த்தகரான எஸ்.மனோகரன், மேற்கண்டவாறு பகிரங்கக் கோரிக்கையொன்றை முன்வைத்தார்.

பொருளாதார மட்டத்தில் வடமாகாணம் தாழ்ந்து காணப்படுகிறதெனத் தெரிவித்த அவர், ​அதனை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் எதனையும் அரசியல்வாதிகளும் எடுக்கவில்லை, அரசாங்கமும் எடுக்கவில்லை. எமது மக்களுக்கு நிவாரணம் மற்றும் வாழ்வாதார உதவிகள் வழங்குவதை உடனடியாக நிறுத்தவேண்டும். அதற்கு பதிலாக புதிய தொழில் முயற்சிகளை ஏற்படுத்துவதுடன், வடக்கில் அதிகளவான முதலீடுகளை ஊக்குவிப்பதற்கான செயற்பாட்டை செய்யவேண்டுமென அவர் கோரிநின்றார்.

வடமாகாணத்தின் பொருளாதார வளா்ச்சிக்கும், தேசிய பொருளாதாரத்தில் வடமாகாணம் தவிர்க்க முடியாத ஓர் அங்கத்தை வகிப்பதற்கும் வடக்கில் பாரிய முதலீடுகள் செய்வது மட்டுமல்லாமல், பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் ஆகியன அபிவிருத்தி செய்யப்பட்டவேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

பெருமளவான மக்கள் வடமாகாணத்திலிருந்து இந்தியாவுக்கு, வருடாந்தம் செல்கின்றனர், அதேபோல் புலம்பெயர் நாடுகளிலிருந்து பெருமளவான மக்கள் வருடந்தோறும் இலங்கைக்கு வந்து செல்கின்றனர். அவா்கள், கட்டுநாயக்கவில் இறங்கி அதன்பின்னர் யாழ்ப்பாணத்துக்கு வந்து பெரும் பயணச் சிரமம், பண விரயத்தை சந்திக்கின்றனர் என சுட்டிக்காட்டிய அவர், பலாலி விமான நிலையத்தை திறப்பதன் ஊடாக, வீண் விரயங்களை தவிர்க்க முடியுமெனக் கேட்டுக்கொண்டார்.

இதேபோல், காங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைப்புச் செய்வதன் ஊடாகவும் அதிகளவான நன்மைகளை வடமாகாண மக்கள் பெற்றுக்கொள்ள இயலுமெனத் தெரிவித்த அவர், அதற்கு புலம்பெயர் தமிழர்களும், வடக்கிலுள்ள தமிழ் அரசியல்வாதிகளும் அதிகளவான அழுத்தங்களைக் கொடுக்கவேண்டும். அதன் ஊடாகவே, வடக்கு மக்கள் பொருளாதார மட்டத்தில் மேம்பட முடியுமென்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .