2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பௌத்த பிக்குக்கு இடம்கொடுக்க மறுத்த வைத்தியர்: பயணிகள் அவஸ்தை

Editorial   / 2018 ஜூன் 13 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பிலிருந்து பிபில நோக்கிப் பயணித்த பஸ் ஒன்றில், மதகுருமார்களுக்கான ஆசனத்தில் அமர்ந்திருந்த வைத்தியர் ஒருவர் பௌத்த பிக்குக்கு ஆசனத்தை வழங்க மறுத்ததால், பயணிகளுடன் குறித்த பஸ் பொலிஸ் நிலையத்துக்கு சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த பஸ்ஸானது, வரக்காப்பொல பிரதேசத்தில பயணித்துக்கொண்டிருக்கும்போது, மூன்ற பௌத்த பிக்குகள் பஸ்ஸில் ஏறியுள்ளனர்.

பஸ்ஸில் அதிகளவான பயணிகள் இருந்தமையினால், மதகுருக்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்திலும் பயணிகள் அமர்ந்திருந்தனர்.

இதனிடையே, மதகுருமார்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்தில் அமர்ந்திருந்த இருவரில் ஒருவர், ஆசனத்தை பௌத்த பிக்கு ஒருவருக்கு வழங்கியிருந்தபோதிலும், அதில் அமர்ந்திருந்த வைத்தியர் ஒருவர் ஆசனத்தை மற்றொரு பிக்குக்கு வழங்க மறுத்துள்ளார்.

மதகுருமார்களுக்கு அவர்களுகாக ஒதுக்கப்பட்டுள்ள ஆசனத்தை வழங்குவது மரபு என பஸ் நடத்துனர் எடுத்துக்கூறியும், குறித்த வைத்தியர் ஆசனத்தை வழங்காது வாய்தர்க்கத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், நிலைமை மோசமானதை தொடர்ந்து, கண்டியில் வைத்து குறித்த வைத்தியர் கோபத்துடன் பஸ்ஸிலிருந்து இறங்கியுள்ளதோடு, அவரின் உறவுக்காரரான அரசியல் பிரமுகர் ஒருவருக்கு இச்சம்பவத்தை தெரியப்படுத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து அந்த அரசியல் பிரமுகர், தனது அரசியல் பலத்தை பயன்படுத்தி குறித்த பஸ்ஸை, அதில் பயணித்த பயணிகளுடன் மஹியங்கனை பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச்​ செல்ல பணித்துள்ளார்.

மஹியங்கனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, சி.ஐ.சந்தன விஜே​சேகர இந்த பிரச்சனையை சுமூகமாக தீர்துள்ளார்.

எனினும் இந்த சம்பவத்தால், பஸ்ஸில் பயணித்த பயணிகள் பெரும் அவஸ்தைக்கு உள்ளாகியதாக தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .