2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் பதவி விலகல்

ஆர்.மகேஸ்வரி   / 2018 ஜூன் 14 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மகளிர்  கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றி வந்த ஹேமந்த தேவப்பிரிய தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டிலிருந்து இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றி வந்த இவரது ஒப்பந்தக்காலம் இந்த வருடம் ஒக்டோபர் மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக இவர் பதவி விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இவரது பதவி விலகலையடுத்து, புதிய பயிற்றுவிப்பாளர் ஒருவர் எதிர்வரும் காலங்களில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக  கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X