2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’மரண தண்டனையை நிறைவேற்றும் திட்டத்தை கைவிட வேண்டும்’

Editorial   / 2018 ஜூலை 12 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் மீண்டும் மரண தண்டனையை நிறைவேற்றும் திட்டத்தை அரசாங்கம் கைவிட வேண்டுமென, சர்வதேச மன்னிப்புச் சபை  வலியுறுத்தியுள்ளது.

போதைப்பொருள் குற்றங்களுக்காக தண்டனை விதிக்கப்பட்ட 19 பேருக்கு  மரணதண்டனையை நிறைவேற்றும் திட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்துள்ளதாக அந்த சபை நேற்று (11) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

40 வருடங்களின் பின்னர் மரணதண்டனை நிறைவேற்றத்தை மீண்டும் ஆரம்பிப்பதன் மூலம் இலங்கை தமது நற்பெயருக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்துகிறு என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"மரணதண்டனையை நிறைவேற்றும் திட்டத்தை அரசாங்கம் உடனடியாக கைவிடவேண்டும், விதிக்கப்பட்ட மரணதண்டனைகளை மாற்றவேண்டும். மரணதண்டனையை ஒழிப்பதற்கான ஆரம்ப நடவடிக்கையாக அதற்கு உத்தியோகபூர்வ தடையை விதிக்கவேண்டும்." என சர்வதேச  மன்னிப்புச்சபையின் தெற்காசிய பிரதி இயக்குநர் தினுஷிகா திஸாநாயக்க  தெரிவித்துள்ளார்.

தெற்காசிய பிராந்தியத்தில் வேறு பல நாடுகளில் பல்வேறு கொடுமையான இந்த நடைமுறையை பின்பற்றியவேள, இதனை கைவிட்டதன் மூலம் இலங்கை முன்மாதிரியாக விளங்கியதுடன் தனித்துவமாக  விளங்கியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மரணதண்டனையை அமுல்படுத்தியதால் குற்றங்கள் குறைந்தது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எதுவும் இதுவரை இல்லை. போதைப் பொருள் குற்றங்களுக்கு மரணதண்டனை விதிப்பது அதற்கு தீர்வாக அமையாது. இது சர்வதேச சட்டத்தை மீறும் செயலாகும். ஆகவே இதுத்தொடர்பில் அரசாங்கம் சிந்திக்க வேண்டும்" எனவும் தினுஷிகா திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இறுதியாக  1976ஆம் ஆண்டிலேயே மரணதண்டனை நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .