2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மின்சாரத் தடை சங்காவையும் விட்டுவைக்கவில்லை

Editorial   / 2017 டிசெம்பர் 07 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கையைத் தாக்கிய ஓகி புயல் காரணமாக, நாட்டின் பல பிரதேசங்களில் மின்சாரத் தடை ஏற்பட்டு, பொதுமக்கள் இருளில் மூழ்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதற்கு, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவும் இலக்கானார்.

இது தொடர்பில், கடந்த நவம்பர் மாதம் 30ஆம் திகதி முதல், தொடர்ந்து தனது டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவுகளையும் ஏற்றி வருகிறார்.

அதில் அவர், “மின்சாரத் தடை தொடர்பில் அறிவிப்பதற்காக, இலங்கை மின்சார சபைக்கு தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்துகின்ற போதிலும், அச்சபையினர் அவ்வழைப்புகளுக்கு பதிலளிப்பதில்லை. அவ்வாறான அழைப்பொன்றுக்கு பதிலளித்த சந்தர்ப்பம் ஏதும் உண்டா?” என, சங்கக்கார கேள்வி எழுப்பியுள்ளார். 

அவரது அந்தக் கேள்விக்கு, பலர் தங்களது பதில்களைப் பதிவேற்றி இருந்தனர். இந்நிலையில், கடந்த 4ஆம் திகதி திங்கட்கிழமையன்று, இவ்விவகாரம் தொடர்பில் மீண்டும் பதிவொன்றை இட்டிருந்த சங்கக்கார, “மின்சாரத் தடை சீர்செய்யப்பட்டு விட்டது” என அதில் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், “மின்சாரச் சபையினரை மிகக் கஷ்டத்துக்கு மத்தியில் தொடர்புகொண்ட போது, ஏராளமான தொலைபேசி அழைப்புகளுக்கு தாம் பதிலளித்துக்கொண்டிருந்ததாக, சபையினர் தெரிவித்தனர்” என்றும், அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார். அத்துடன், மின்சாரத் தடையைச் சீர் செய்தமைக்காக அவர் தனது நன்றியையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .