2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

முச்சக்கரவண்டி கட்டண விவகாரம்: சங்கங்களுக்கு இடையில் முரண்பாடான கருத்து

Editorial   / 2017 ஜூன் 20 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

முச்சக்கரவண்டிக்கான பயணக் கட்டணத்தை அதிகரிக்குமாறு இலங்கை சுயதொழிலாளர் சங்கத்தின் முச்சக்கரவண்டி தேசிய சம்மேளம் கோரியுள்ள நிலையில், அந்தக் கட்டணத்தை தாங்கள் அதிகரிக்கப் போவதில்லையென அகில இலங்கை முச்சக்கரவண்டிச் சாரதிகள் மற்றும் ஓட்டுநர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.   

ஜூலை மாதம் 10ஆம் திகதி முதல், அமுலுக்கு வரும் வகையில், முச்சக்கரவண்டி வாடகைக்கான கட்டணத்தை, முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணத்தை 10 ரூபாயால் அதிகரிக்குமாறு கோரியுள்ளதாக, இலங்கை சுயதொழிலாளர் சங்கத்தின் முச்சக்கரவண்டி தேசிய சம்மேளனத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்தார்.

முச்சக்கரவண்டி உதிரிப்பாகங்களின் விலைகள் அதிகரித்துள்ளமையால் முச்சக்கரவண்டி சாரதிகளாக, செயற்படுவோர். பாரிய பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.   
முச்சக்கரவண்டி பயணக்கட்டணத்தை யார் அதிகரிக்காவிடினும், நாங்கள் அதிகரிப்போம். இந்தக் கட்டண அதிகரிப்பால், முச்சக்கரவண்டியில் பயணிப்போருக்கு சிறு சிரமம் ஏற்படக்கூடும். எனினும், முச்சக்கரவண்டிச் சாரதியாக தொழில் புரிவோரால், ஒன்றும் செய்யமுடியாது.   

முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணத்தை 10 ரூபாயால் அதிகரிப்போம். எனினும், இரண்டாவது கிலோமீற்றர் முதல் பழைய முறைப்படி 40 ரூபாய் பிரகாரம் அறவிடுவோம் என்றும் கூறினார்.   

இந்நிலையில், முச்சக்கரவண்டி வாடகைக் கட்டணத்தை, தமது சங்கம் ஒருபோதும் அதிகரிக்காது என்று அகில இலங்கை முச்சக்கரவண்டிச் சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்தார்.   

முச்சக்கரவண்டியில் பயணிப்போரையும், அரசாங்கத்தையும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதற்கு இடமளிக்கபோவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.   

பயணிகளுக்கு கௌரவமான சேவையை வழங்குவதே எங்களுடைய நோக்கமாகும். ஒவ்வொருவரின் விருப்பத்தின் பிரகாரம் முச்சக்கரவண்டிக் கட்டணங்களை அதிகரிக்கமுடியாது. கட்டணத்தை அவ்வாறு அதிகரித்தோமாயின், முச்சக்கரவண்டியில் தற்போது பயணிக்கும் பயணிகள் கூட, பயணிக்கமாட்டார்கள்.   

ஆகையினால், முச்சக்கரவண்டிகளை கட்டுப்படுத்தும் நிறுவனமொன்றை நிறுவுமாறு, அரசாங்கத்திடம் நாங்கள் கோரிக்கை விடுக்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .