2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

முன்னாள் கடற்படைப் பேச்சாளரின் பிணை மனு ஜனவரியில் விசாரணை

Editorial   / 2017 டிசெம்பர் 07 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கடற்படை  ஊடக பேச்சாளர் உள்ளிட்ட அறுவர் தமக்கு பிணை வழங்குமாறு, தாக்கல் செய்துள்ள மனுவை, எதிர்வரும் ஜனவரி மாதம் 9 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆர். ஹெயியன்துடுவ இன்று (07) உத்தரவிட்டார்.

கொழும்பு பகுதியில் சிறுவர்கள் உள்ளிட்ட 11 பேரை கடத்திச் சென்று காணாமல் ஆக்க செய்ததாக இவர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைப்பட்டுள்ளது.

 யுத்தகாலத்தில் இராணுவத்தில் இவர்கள் கடமையாற்றினர் எனவும்,    குறித்த சம்பவம் தொடர்பில் நீண்டகாலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதன்  காரணமாக, விரைவில் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மனுதாரர் சார்பாக நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி மைத்திரி குணரத்ன நீதிமன்றிடம் கோரியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .