2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் தவறில்லை: ராஜித

Niroshini   / 2018 மே 16 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

"மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை தமிழ்நாட்டில் உள்ள மக்கள் அனுஷ்டிக்கவில்லை, வடக்கில் வாழும் எமது தமிழ் மக்களே அனுஷ்டிக்கின்றனர். இதில் எந்த தவறும் இல்லை என, சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மே 18ஆம் திகதி விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை நினைவு கூறி படையினரை கௌரவிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இந்த தினத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக  வடக்கில் அனுஷ்டிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஊடகவியலாளர், ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

"ஜேவிபியினரும் இவ்வாறான தினத்தை அனுஷ்டிக்கின்றனர். இதேபோன்றே வடக்கில் யுத்தத்தின் போது இறந்த தமது சகோதரர் உள்ளிட்ட உறவுகளை நினைவுகூறியே வடக்கில் உள்ள தமிழ் மக்கள் இவ்வாறான ஒரு தினத்தை அனுஷ்டிக்கின்றனர். இதில் எந்தவித தவறும் இல்லை. அங்குள்ள மக்களும் எமது மக்களே" எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்நஜலையில் தமிழீழல விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பு . இந்த அமைப்பு தோற்கடிக்கப்பட்ட தினமே இவ்வாறு அனுஷ்டிக்கப்படுகின்றது. இதனை அரசாங்கம் அங்கீகரிக்கின்றதா? என கேள்வி எழுப்பப்படடது.

இதற்கு பதிலளித்த அமைச்சர், "வடக்கில் உள்ள உறவுகளை இழந்தவர்களே இந்த தினத்தை அனுஷ்டிக்கின்றனர். ஜேவிபியும் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டனர். அவர்களும் இன்று நினைவுகூறி இவ்வாறு நினைவேந்தல் தினத்தை அனுஷ்டித்துவருகின்றனர். இதேபோன்றே வடக்கு மக்களும் அனுஷ்டித்துவருகின்றனர்.

வடக்கு மக்களை வேறு பிரதேச மக்களாக பிரித்து பார்க்ககூடாது. அவர்களுக்கும் தமது உறவுகளின் இழப்புகள் தொடர்பில் உணர்வுகள் உண்டு. யுத்தத்தின் போது எந்வொரு நாட்டிலும் பயங்கரவாதிகள் இறந்ததில்லை. பொதுமக்களும் இறந்ததுண்டு." என அமைச்சர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X