2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மைத்திரி - மஹிந்த இணைவதில் இரு நந்திகள் குறுக்கீடு

Editorial   / 2017 டிசெம்பர் 07 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சின்னசாமி ஷிவானி

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் செயற்பட, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரும்பம் கொண்டுள்ள போதிலும், அச்செயற்பாட்டுக்குக் குறுக்காக இருக்கும் இருவரால், இணைவது தடைப்பட்டுள்ளதென, அமைச்சரவைப் பேச்சாளர்களுள்  ஒருவரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், நேற்று (06) இடம்பெற்ற போதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் தயாசிறி  ஜயசேகர கூறியதாவது,

“மஹிந்த – மைத்திரி இணைவதைத் தடுப்பவர்களின் பெயர் விவரங்களை, விரைவில் நாம் பகிரங்கமாக அறிவிப்போம். மஹிந்த ராஜபக்ஷ, தமது அரசியல் வரலாற்றில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்தே அமைச்சராகவும் ஜனாதிபதியாகவும் தெரிவாகினார். அவருக்கு வேறு தெரிவு ​இருக்கவில்லை.

“எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்குவதை விடுத்து, சுதந்திரக் கட்சியில் இருந்துகொண்டு ஏனைய கட்சியினருக்கு ஆதரவு வழங்குவத​னை, கட்சி உறுப்பினர்கள் தவிரத்துக்கொள்ள வேண்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு  செயற்படுவதற்கு எதிராக, சுதந்திரக் கட்சியின் மத்தியஸ்தக் குழு தடை விதித்துள்ளது” என்றார்.

தொடர்ந்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் தயாசிறி ஜயசேகர,

கேள்வி: எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சுதந்திரக் கட்சி, ஒன்றிணைந்த எதிரணியுடன் இணைந்து செய்றபட ​உள்ளதா?

பதில்:  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி, கட்சி அமைக்குமாறு யாரும் கூறவில்லை. ஒன்றிணைந்த எதிரணியினருடன் இணைந்து செயற்பட சுதந்திரக் கட்சி தயாராக இருக்கிறது. அண்மையில் அவர்கள் இது குறித்த கலந்துரையாடலுக்கு வந்த போது, அரசாங்கத்திலிருந்து வெளியேறுமாறு கூறினர். இதற்கு சுதந்திரக் கட்சி இணக்கம் தெரிவிக்கவில்லை.

எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்பட விரும்புபவர்கள் இணைந்து செயற்படலாம். சுதந்திரக் கட்சி இம்முறை சில பகுதிகளில் கை சின்னத்திலும் சில பகுதிகளில் வெற்றிலைச் சின்னத்திலும் களமிறங்கும்.

கேள்வி: இம்முறை உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்களை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கைப்பற்றுமா?

பதில்:  ற்போதைய ​அரசியல் சூழ்நிலைகளை வைத்து பார்க்கின்ற போது எந்த கட்சியும் தனித்து உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்களை கைப்பற்றப்போவதில்லை. உள்ளூராட்சிமன்ற அதிகாரங்களைக் கைப்பறுவதாயின், தேர்தலில் 60 சதவீதம் வாக்குகளை பெற்றுக்கொள்ள வேண்டும். தற்போதைய சூழ்நிலையில், அது சாத்தியமான  ஒன்றாக காணப்படவில்லை. இவ்வாறான நிலையில் கூட்டிணைந்தே ஆட்சி நடத்த வேண்டி ஏற்படும்.

கேள்வி: சுதந்திரக் கட்சி உறுப்புரிமையில் இருந்துகொண்டு, சிலர் பொதுஜன முன்னணி கட்சியின் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் குறித்து சுதந்திரக் கட்சி நடவடிக்கை எடுக்காதது ஏன்?

பதில்:  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து சேவையாற்ற முடியாதவர்களே இவ்வாறு செயற்பட்டு வருகின்றனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கட்சியிலிருந்து பிரிந்து செல்லுமாற  யாரையும் கூறவில்லை. சுதந்திரக் கட்சியில் இருந்துக்கொண்டெ அரசாங்கத்தை விமர்ச்சியுங்கள் என்றே கூறினார். ஒன்றிணைந்த எதிரணியினரில் சிலர், சுதந்திரக் கட்சியுடன் இணையவே  முயன்று வருவதனை அவதானிக்க முடிகிறது. அரசாங்கத்தை கொண்டுசெல்ல ஒன்றிணைந்து செயற்படுவதே அவசியம்.

கேள்வி: ஐக்கிய தேசிய கட்சியும் சுதந்திரக் கட்சியும் இணைந்து தேர்தலில் போட்டியிடப் போகிறதா?

பதில்:  இணையக்கூடிய சூழ்நிலையும் வரலாம்.

இதன்போது குறுக்கிட்டு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கயந்த கரணாதிலக்க, “தேர்தலில் யாரைத் தெரிவுசெய்ய ​வேண்டும், யாருடன் இணைந்து செயற்பட வேண்டும் என, மக்கள்  தெளிவாகப் புரிந்து வைத்துள்ளனர். ஆட்சி அதிகாரம் யாரிடம் உள்ளதோ, அவர்களுக்கே வாக்களிக்க ​வேண்டும் என்பது பற்றி மக்களுக்கு தெரியும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .