2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மொட்டின் வேட்பாளரை ’ஐ.தே.க பாணியில் அறிமுகப்படுத்துவோம்’

Editorial   / 2019 மார்ச் 15 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.கமல்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர், ஏற்கெனவே தெரிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, இறுதித் தருணம் வரும் வரையில், அவரது பெயரை வெளிபடுத்தப் போவதில்லை என்றார்.

கொழும்பிலுள்ள, சுதந்திர ஊடக மையத்தில், நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது, ஐ.தே.கவினர், தமது பொது வேட்பாளரை இறுதித் தருணத்தில் அறிவித்ததாலேயே மைத்திரியை தோற்றகடிக்க முடியாமல் போனதாகவும் அதேபோன்று, பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை, இறுதிவரை அறிவிக்கப் போவதில்லை என்றார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் அமைச்சர்களான சஜித் பிரேமதாஸ, ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக உள்ளிட்டவர்கள் ஐ.தே.முவின் அடுத்த பொது வேட்பாளராகக் களமிறங்க முட்டி மோதுவதாகவும் அந்த முரண்பாட்டை மறைக்கவே, மஹிந்த அணிக்குள் பிளவு எனப் பிரசாரத்தை முன்னெடுப்பதாகவும் கூறிய டிலான் எம்.பி, மேலும், பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது பொதுஜன பெரமுன ஒற்றைமையாக இருக்கத் தவறிவிட்டதாவும் எவ்வாறெனினும், இறுதி வாக்கெடுப்பின் போது, பாதீட்டைத் தோற்கடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .