2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

’மொட்டு’ கைவிரித்தால் ’கை’ தளராது - மஹிந்த

Editorial   / 2019 ஜூலை 11 , பி.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தை தோல்வியில் நிறைவடைந்தால் வேறு புதிய கூட்டணியொன்றை உருவாக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடனான பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்காவிட்டால் தமது கட்சியின் உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியுடனோ அல்லது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடனோ இணைந்துகொள்ள மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
அதற்கமைய, ஸ்ரீலங்கா பொதுஜன பெரதுன, மக்கள் விடுதலை முன்னணி, பாட்டளி சம்பிக்க ரணவக்கவின் தரப்பினர் உள்ளிட்டவர்களுடன் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், பொதுஜன பெரமுனவுடன் முன்னெடுக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தைகளின் ஊடாக இரு தரப்பினரும் இணைந்து ஒரு வேட்பாளரை களமிறக்கும் நோக்கம் காரணமாக தமது தரப்பு ஜனாதிபதி வேட்பாளரை பெயரிடவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்  ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இந்த விடயங்களை கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .