2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

யுத்தம் வென்றெடுக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு சந்திரிகா பாராட்டு

Super User   / 2010 ஜூன் 04 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் வென்றெடுக்கப்பட்டமைக்கு காரணமாக இருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் ஏனையவர்களுக்கும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க பாராட்டு தெரிவித்துள்ளார். எனினும், நாட்டில் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு எவ்வித முனைப்பும் எடுக்கப்படாமை வருத்தமளிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இந்த நாடு அனைத்து இன மக்களுக்கும் உரித்தானதாகும். தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஆயிரக்கணக்கான வருடங்களாக அவர்களும் பாடுபட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இவ்வாறானதொரு நிலைமையில் ஏனைய இனத்தவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டியது அவசியமானதென முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
 
நாட்டின் சகல மக்களும் ஒரே விதமாக நோக்கப்பட வேண்டும் எனவும், அனைவரினது உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். யுத்த வெற்றி என்ற கேக் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு உண்ண வேண்டியது எனவும், தனித்து உண்ணக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 


You May Also Like

  Comments - 0

  • xlntgson Friday, 04 June 2010 09:21 PM

    தேர்தல் முடிந்து விட்டது, பல்லாண்டுகள் ஆளப்போகின்றவர் மகிந்த ராஜபக்ச. ஆகையினால் இவ்வாறு கூறுகின்றார் என்று நினைக்கின்றேன், காலம் கடந்த ஞானம். இவர்தான் கூறினார்: யுத்தத்தை வென்றவர் ஜெனரல் பொன்சேகா என்று! இவர் கூறும் ஆலோசனைகளில் எதையேனும் இவரது ஆட்சி காலத்தில் நடைமுறைப்படுத்தினாரா? இவரும் தனியாக தின்பதில் வல்லவர் என்றுதான் கூறவேண்டும். இராஜபக்சவினர் தங்களது ஆட்சிக்காலமுடிவிலேயே அவ்வாறான விமர்சனத்துக்கு உள்ளாக்க கடவர்கள் என்றாலும் விமர்சிக்க தகுதி உள்ளவர் தான் இவர். ஓய்வு பெறுவது கடினம், அரசியலில்!

    Reply : 0       0

    koneswaransaro Saturday, 05 June 2010 03:32 AM

    இந்த ஞானமெல்லாம் பதினொருவருட ஆட்சியில் எங்கே போனது? கண் கெட்டபிறகு சூரிய நமஸ்காரம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .