2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ரஷ்யாவிடமிருந்து ஹெலிகொப்டரை கொள்வனவு செய்யும் இலங்கை

Editorial   / 2019 பெப்ரவரி 12 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

M.I .17 ரக ஹெலிகொப்டரை ரஷ்யாவிலிருந்து கொள்வனவு செய்வது தொடர்பில், இலங்கை கலந்துரையாடலை முன்​னெடுத்து வருவதாக, ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.

அமைதிக் காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்காக, இலங்கை குறித்த ஹெலிகொப்டரை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

1990ஆம் ஆண்டுக்கு முன்னதாக இலங்கை M.I .17 ரக ஹெலிகொப்டரை கொள்வனவு செய்திருந்ததுடன், 100 நாடுகள் வரை குறித்த ஹெலிகொப்டரை பயன்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொருள்கள் கொண்டு செல்ல, பயணிகள் போக்குவரத்து, சோதனை நடவடிக்கைகள், மீட்பு நடவடிக்கைகள், தீயணைப்பு விடயங்கள் என்பவற்றிட்காக பயன்படுத்தும் நோக்கிலேயே இந்த ​ ஹெலிகொப்டர் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஹெலிகொப்டரை கொள்வனவு செய்வது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதுடன், இதற்கான விலை குறித்த தீர்மானங்கள் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .