2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வழக்குக்காக அட்மிரல் ரவீந்திர 4 மணிநேரம் பஸ்ஸில் காத்திருந்தார்

Editorial   / 2018 டிசெம்பர் 05 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் கடற்படைத் தளபதியும், பாதுகாப்பு சபையின் பிரதானியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன இன்று கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் 4 மணிநேரம் சிறைச்சாலை பஸ்ஸில் காத்துக் கிடந்துள்ளார்.

காலை 10.30 மணியளவில் சிறைச்சாலை பஸ் மூலம் கோட்டை நீதவான் வளாகத்துக்கு அழைத்து வரப்பட்ட ரவீந்திரவின் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் வரை பஸ்ஸிலேயே காத்துக்கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

அதற்கமைய பிற்பகல் 2.10 மணியளவில் அட்மிரல் ரவீந்திரவை சிறைச்சாலை அதிகாரிகள்  நீதிமன்றுக்குள் அழைத்துச் சென்றதுடன், தற்போது ரவீந்திர விஜேகுணவர்தனவுக்கு எதிரான வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபருக்கு, பாதுகாப்பு அடைக்கலம் வழங்கிய குற்றச்சாட்டிலேயே அட்மிரல் ரவீந்திர விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .