2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

விவசாயத்துறை முதல் காலாண்டில் 3.2 சதவீதம் வீழ்ச்சி

Editorial   / 2017 ஜூன் 20 , மு.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

2017ஆம் முதல் காலாண்டில், விவசாயத்துறையில் நூற்றுக்கு 3.2 சதவீதம் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.   

சீரற்ற வானிலை காரணமாகவே, இந்தப் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் அத்திணைக்களத்தின் விவசாயப் பிரிவு அறிவித்துள்ளது.   

அதனடிப்படையில், 2017ஆம் ஆண்டு முதல் காலாண்டில், தெங்கு பயிர் செய்யப்படும் பிரதேசங்களில் கடுமையான வரட்சி காரணமாக, தேங்காய் உற்பத்தி 53.1 சதவீதமாகவும் எண்ணெய் பயிர்கள் உற்பத்தி 10.2 சதவீதமாகவும் குறைவடைந்தது.   

இறப்பர் உற்பத்தி 17.2 சதவீதமாகக் குறைவடைந்ததுடன், தேயிலை உற்பத்தியானது 5.7 சதவீதமாகக் குறைந்தது. அத்துடன், வனவியல் மற்றும் மரம் வளர்ப்பு 9.3 சதவீதமாகவும் விலங்குப்பொருட்கள் உற்பத்தி 6.9 சதவீமாகவும் நறுமணப்பொருட்கள் பயிர்ச் செய்கை 6.1 சதவீதமாகவும் மீன்பிடித்துறை 5.3 சதவீதமாகவும் குறைவடைந்திருந்தது என்றும் அந்தத் திணைக்களம் அறிவித்துள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .