2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வீழ்ச்சியடையும் இலங்கைத் தேயிலைக்கான கேள்வி

Editorial   / 2018 மே 17 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளைபோசேட் பாவனைக்கான தடை நீக்கப்பட்டுள்ளதால், உலக சந்தையில் இலங்கைத் தேயிலைக்கான கேள்வி குறைவடைந்துள்ளதாக சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கிளைபோசேட் தடை நீக்கத்தால், நாட்டின் மொத்த தேயிலை ஏற்றுமதியில் 79 வீதத்தை கொண்டுள்ள தமது உற்பத்திகளின் விலையும் குறைவடைந்துள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

அரசியல் செல்வாக்குள்ள சில தேயிலைத் தோட்ட நிறுவனங்கள், தமது வருமானத்தை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் கிளைபோசேட் தடைக்கான நீக்கத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக அந்த சங்கத்தின்  தேசிய அமைப்பாளர் லால் பிரேமநாத் தெரிவித்துள்ளார்.

சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் இயற்கை பசளைகள் மற்றும் அதற்கு இணையான பசளை வகைகளையே பயன்படுத்துவதாகவும், கிளைபேசைட்டை ஒருபோதும் பயன்படுத்துவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிளைபோசேட் தடை நீடிக்கப்பட வேண்டுமெனவும், உற்பத்தியாளர்களுக்கு அரசாங்கம் உரமானியத்தை தொடர்ந்து வழங்க வேண்டுமெனவும் லால் பிரேமநாத் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .