2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஹோட்டல் உரிமையாளர் சடலமாக மீட்பு (VIDEO)

Editorial   / 2020 ஜூலை 07 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கெஸ்பெவ பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவரது மனைவி படுகாயமடைந்த நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த ஹோட்டலுக்குள் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், இன்று (07) அதிகாலை 4 மணியளவில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த சம்பவத்தில் 50 வயதுடைய அதே பகுதியை சேர்ந்த நபரே கொல்லப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில், பிலியந்தல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X