2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

பிரதம நீதியரசரின் ரீட் மனு 15ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

Super User   / 2013 ஜனவரி 03 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் ரீட் மனுவை ஜனவரி 15ஆம் திகதி வரை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இந்த ரீட் மனு இன்று வியாழக்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே மேன்முறையீட்டு நீதிமன்றம் மேற்கண்டவாறு ஒத்திவைத்தது.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகித்த உறுப்பினர்கள் மற்றும் சபாநாயகர் ஆகியோரை நீதின்மன்றத்தில் இன்று ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் 2012ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 21ஆம் திகதி அறிவிப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுவுக்கு எதிராக இடையீட்டு மனுவொன்று நேற்று புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசரின் ரீட் மனுவை செல்லுப்படியற்றதாக்க வேண்டும் என கோரியே இந்த இடையீட்டு மனுவை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொழிற்சங்க சம்மேளனம் தாக்கல் செய்திருந்தது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X