2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

11,500 கைதிகளுக்கு பிசிஆர் பரிசோதனை

S. Shivany   / 2020 டிசெம்பர் 03 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய, இதுவரை 11,500 பேருக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

போதைப்பொருள் வரத்தகத்துடன் தொடர்புடைய கைதிகள் நாளுக்கு நாள் அதிகரிப்பதே, சிறைச்சாலையில் இடப்பற்றாக்குறைக்கு காரணமாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற குழுநிலை விவாதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்துரைத்த அவர், போதைபொருளுடன் தொடர்புடைய கைதிகளுக்கு புனர்வாழ்வளிப்பதற்காக புதிதாக புனர்வாழ்வு நிலையங்களை அமைக்க  நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், கொவிட் தொற்று ஏற்படும் கைதிகளை கந்தகாடு, கல்லேல்ல தனிமைப்படுத்தல் நிலையங்களில் வைத்து சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், கைதிகளை பார்வையிட தற்காலிக தடை விதித்துள்ளதாகவும் புதிய கைதிகளை தனித்து வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 

இதேவேளை, சிறைச்சாலைகளில் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், சுகாதார உபகரண தொகுதிகளை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .