2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கதிர்காம ஆடித் திருவிழாவில் வடபகுதியிலிருந்து பெரும் எண்ணிக்கையான பக்தர்கள்

Suganthini Ratnam   / 2010 ஜூலை 19 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கதிர்காம திருத்தல ஆடித் திருவிழாவில் கலந்துகொள்ளும் முகமாக இம்முறை  வடபகுதியிலிருந்து  பெரும் எண்ணிக்கையான பக்தர்கள் புறப்பட்டுச் சென்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு , வவுனியா ஆகிய மாவட்டங்களிலிருந்து கதிர்காம  ஆடித் திருவிழாவுக்கு  செல்வதற்கு இன்னும் பலர் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கென பெருமளவிலான தனியார் பஸ்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளன.

யுத்த சூழ்நிலை மறைந்துள்ள நிலையில் அச்சமின்றி செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளமை இதற்குரிய காரணமாகும்.

கடந்த 12ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்மான உற்சவம்  தற்போது நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், எதிர்வரும் 22ஆம் திகதி தீ மிதிப்பும்,  25ஆம் திகதி முருகப் பெருமான் வள்ளி தெய்வானை சகிதம் வீதியுலா வருதலும், 26ஆம் திகதி நீர்வெட்டுடன் திருவிழா நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .