2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

அமைச்சுக்களின் செயற்பாடுகளை மதிப்பிடுவதற்கு இரகசிய குழு

Super User   / 2010 செப்டெம்பர் 11 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கடந்த சில மாதங்களில் ஒவ்வொரு அமைச்சும் மேற்கொண்ட செயற்பாடுகளை மதிப்பிட்டு தனக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரகசிய விசாரணைக் குழுவொன்றை நியமித்துள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் அமைச்சரவையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் புதிய அமைச்சுப் பொறுப்புகளை வழங்கும்போது மேற்படி விசாரணைக் குழுவின் அறிக்கைகளை ஜனாதிபதி கருத்திற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலத்திற்கான பதவிப்பிரமாணம் நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட பின்னர் அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளது.

அண்மையில் அரசாங்கத் தரப்பு மாறிய ஐ.தே.க. எம்.பிகள் மற்றும் ஸ்ரீல.மு.காங்கிரஸ் நாடாளுமன்ற அங்கத்தவர்களில் சிலருக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 18 ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுவதற்காக ஐ.தே.க. எம்.பிகள் 6 பேரும் முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிகள் 8 பேரும் அரசாங்கத்திற்கு ஆதரவளித்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை ஊவா, வடமேல் மாகாணம், வடமத்திய மற்றும் தென் மாகாணங்களைச் சேர்ந்த தற்போது பிரதியமைச்சர் பதவிகளை வகிக்கும் சிலர் நவம்பர் மாதம் அமைச்சர்களாக நியமிக்கப்படுவர் எனவும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


You May Also Like

  Comments - 0

  • xlntgson Saturday, 11 September 2010 09:31 PM

    இரகசிய ஏற்பாடுகள் சொல்லிவிட்டால் இரகசியம் ஆகுமா? இரகசிய ஏற்பாடுகளுக்கு ஜனநாயகவழிமுறை இருக்குமா? மிகவும் சர்ச்சைக்குரிய விடயம் தான். அரசோடு இணைந்திருக்கும் புத்தி ஜீவிகள் விளக்கம் அளிக்க வேண்டும். இது இரு பக்கம் கூர்மையான கத்தி மாதிரி ஒரு நாட்டுக்குள் பிரஜைகளை உளவு பார்ப்பது எவ்வளவு தூரம் சரியானது, அவர்கள் குற்றம் இழைக்காதவர்களாக இருந்து தாங்கள் இரகசியமாக கண்காணிக்கப்படுவதாக பயந்தால் மனோவியல் பிரச்சினைகளை எதிர்நோக்கலாம். முதல் இரவை அனுபவிக்கும் ஜோடியின் அறையில் இரகசிய கெமரா வைப்பது போலாகும் என்ன?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .