2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதி அமெரிக்காவுக்கு பயணம்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 15 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று அமெரிக்காவுக்கு பயணமானார். அடுத்தவாரம் இடம்பெறவுள்ள ஐ.நா. கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.  

தனிப்பட்ட காரணங்களுக்காக சில தினங்களுக்கு முன்னதாகவே ஜனாதிபதி அமெரிக்காவுக்கு  பயணமாகியதாக கூறிய அரசாங்க தரப்பு தகவல் வட்டாரங்கள், ஐ.நா.வின் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் அவர் நாடு திரும்பவுள்ளதாகவும் கூறின.

இந்த விஜயத்தில் ஜனாதிபதியுடன், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உள்ளிட்ட உயர்மட்டக் குழுவொன்றும் விரைவில் இணைந்துகொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இலங்கை தொடர்பில் ஆராய்வதற்காக ஐ.நா.பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் நல்லிணக்க ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி முதல் தடவையாக அமெரிக்காவுக்கு பயணமாகியுள்ளார்.

யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஐ.நா.செயலாளருக்கு ஆலோசணை வழங்கப்படும் வகையில் நியமிக்கப்பட்ட இந்த நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .