2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

விக்கிலீக்ஸில் லக்ஷர் ஈ தொய்பாவின் இலங்கை முயற்சிகள் குறித்த தகவல்கள்

Super User   / 2010 டிசெம்பர் 06 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவின் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் தளங்களை அமைப்பதற்கான உதவி நிலையமொன்றை கொழும்பில் ஏற்படுத்துவதற்கு லக்ஷர் - ஈ. தொய்பா இயக்கம் முயற்சித்ததாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் 19.6.2009 ஆம் திகதியிடப்பட்ட தகவலொன்றில் (கேபிள்) குறிப்பிடப்பட்டுள்ளதை விக்கிலீக்ஸ் இணையத்தளம் அம்பலப்படுத்தியுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளில் அபாயகரமான வகையில் லக்ஷர் ஈ. தொய்பா அமைப்பு தன்னை விஸ்தரிப்பது குறித்தும் அக்கேபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்வேறு புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் இக்கேபிள் குறிப்பு அனுப்பப்பட்டுள்ளது. எனினும் அதன் மூலம் விபரங்கள் குறிப்பிடப்படவில்லை.

இலங்கை, பாகிஸ்தான், நோபளம் ஆகிய நாடுகளைத் தளமாகக் கொண்ட லக்ஷர் ஈ தொய்பா அங்கத்தவர்களின் உதவியுடன் தென்னிந்தியாவில் இரு அணிகளை நிலைப்படுத்துவதற்கு லக்ஷர் தலைவர்களில் ஒருவரான ஷபீக் கபா,  கடுமையாக முயற்சி செய்ததாக அக்கேபிளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0

  • tamilsalafi.edicypagaes.com Tuesday, 07 December 2010 02:53 PM

    ஷேக் ஸாலிஹ் அல் பவ்சான் அவர்களிடம் கேட்கப்பட்டது.
    ஒசாமா பின் லாடனும் அவனை பின் தொடர்பவர்களும் , அவனுடைய கொள்கையை ஊக்குவிப்பவர்களும், கவாரிஜ் என்ற வழிகெட்ட பிரிவை சேர்ந்தவர்களா ?

    ஷேக் ஹபிதஹுல்லாஹ் பதிலளித்தார்கள் >>

    மிகவுமே பிரபல்யமான அடிப்படை தான் , ஆட்சி அதிகாரம் பெற்றவர்களுக்கு எதிராக கலகம் செய்பவர்கள் இந்த வழிகெட்ட கவாரிஜ் பிரிவை சேர்ந்தவர்கள் என்பதும் ,இன்னும் இது பின் லாடனோ , அவனைப் போன்ற யாராக இருந்தாலும் முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கு எதிராக கலகம் செய்து கிளம்பிவிட்டார்கள் என்றால் இந்த வழிகெட்ட காவாரிஜ் பிரிவில்அடங்கிவிடுவார்க

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .