2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

கச்சதீவு ஒப்பந்தத்தை ரத்துச் செய்யக்கோரி வழக்கு

Super User   / 2011 ஏப்ரல் 10 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

1974 ஆம் ஆண்டு இந்திய - இலங்கை நாடுகளுக்கிடையில் கையெழுத்திடப்பட்ட கச்சதீவு ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கு இந்திய மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை மேல் நீதிமன்றத்தில் பொதுநவல வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

"இந்திய - இலங்கை எல்லையில் கடற்படை மற்றும் இந்திய விமானப் படையினர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். கடலில் மீன்பிடிக்க் செல்லும்  இந்தய மீனவர்களுடன் கரையோர காவல் படையினரும் செல்ல வேண்டும்.  இந்திய கடல் எல்லைக்கு மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் நூற்றுக்கணக்கான இந்திய மீனவர்கள் கொல்லப்பட்டமைக்கு நஷ்ட ஈடு பெறுவதற்காக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க வேண்டும்" எனவும் அம்மனுவில் கோரப்பட்டுள்ளது.

கடலில் பலரின் உயிர்கள் இழக்கப்பட்ட போதிலும் இந்திய மத்திய, மாநில அரசுகள் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் ஆனால் உலகக்கிண்ணத் தொடரின் 37 போட்டிகளில் 27 போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கு 6.21 கோடி ரூபா செலவிடப்படடுள்ளது எனவும் அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய அணிக்கு தமிழக அரசு 3 கோடி ரூபா வழங்கியு;ளது. தமிழக வீரர் ஆர் . அஸ்வினுக்கு மேலதிகமாக ஒரு கோடி ரூபா வழங்கப்பட்டுள்ளது. அவர் ஒரு போட்டியில்கூட விளையாடவில்லை. மறுபுறும், கொல்லப்பட்ட தமிழக மீனவர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் 3 லட்சம் ரூபாவே வழங்கப்பட்டுள்ளது' என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


You May Also Like

  Comments - 0

  • xlntgson Sunday, 10 April 2011 08:36 PM

    தேர்தலின் பின் மறக்கப்படும்! கொடுத்ததை திருப்பி பெற இயலாது!
    ஹொங்கொங்கை சீனா பிரிட்டனுக்கு நூறு வருட குத்தகைக்கு கொடுத்ததைப் போல் இது கொடுக்கப்படவில்லை என்பது கவனிக்கப்படத் தக்கது!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .