2024 மார்ச் 28, வியாழக்கிழமை

’2018க்காக இரு பாதீடுகள் தயாரிப்பு’

Editorial   / 2017 நவம்பர் 14 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

“இம்முறை வரவு - செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்கும் போது, இரண்டு வரவு - செலவுத்திட்ட ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன” என்று, மக்கள் விடுதலை முன்னணி குற்றஞ்சாட்டுகின்றது.

“இவ்விரு ஆவணங்களில் ஒன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அதேவேளை, நிறைவேற்றுவதற்காக வேறொரு வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது” என, முன்னணியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

“நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வ​ரவு - செலவுத் திட்டத்தில், அரச நிறுவனங்கள் விற்கப்படுவது குறித்தோ அல்லது குத்தகைக்கு விடப்படுவது குறித்தோ குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் உண்மையிலேயே, அரச நிறுவனங்கள் பலவற்றைத் தனியாருக்கு விற்பனை செய்யவும் மேலும் சிலவற்றை தனியாரிடம் குத்தகைக்கு விடவும் இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

“அதனால், இந்த வரவு - செலவுத் திட்டத்தினால் நாட்டுக்கு எவ்வித நன்மையும் இல்லை. அதனால், இம்முறை வரவு - செலவுத் திட்டத்தை எமது கட்சி எதிர்க்கும் என, பிமல் ரத்நாயக்க மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X