2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

21 நாட்களுக்கு இந்தியாவில் நாடு தழுவிய ஊரடங்கு

Editorial   / 2020 மார்ச் 24 , பி.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் இன்றிரவு 12 மணி முதல் 21 நாட்களுக்கு நாடுமுழுவதும் ஊடரங்கு கடைபிடிக்கப்படும் என பிரதமர் மோடி நாட்டு மக்ககளுக்கு தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து மத்திய மற்றும் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய அரசு தொடர்ந்து கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை மாநில அரசுக்கு வழங்கி வருகிறது.

இந்தநிலையில் பாரத பிரதமர் மோடி சில நாட்களுக்கு முன் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பொதுமக்கள் தங்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தால் மட்டுமே கொரோனா வைரசை விரட்ட முடியும் என்று தெரிவித்த அவர், 22ஆம் திகதி  பொதுமக்கள் சுயஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அதன்படி நேற்று முன்தினம் நாடு தழுவிய சுயஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இருந்தாலும் இந்தியா முழுவதும் பொதுமக்கள் அதை சரியாக கடைபிடிக்கவில்லை. 

பொதுஇடங்களில் அதிக அளவில் கூடினர். இதனால் மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை நீட்டித்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவுரை வழங்கியுருந்தது. அதனடிப்படையில் பெரும்பாலான மாநிலங்கள் ஊடரங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.

இந்நிலையில் இன்று பாரத பிரதமர் மோடி 2-வது முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .