2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

’28,589 படையினர் பலியாகியுள்ளனர்’

Editorial   / 2018 மே 17 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்​காலத்தில் அனுபவித்து வரும் சுதந்திரத்துக்காக, 28 ஆயிரத்து 589 ​போர் வீரர்கள், தங்களது உயிர்களைத் தியாகம் செய்துள்ளனரென, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்தார்.

தேசியப் போர் வீரர்கள் தினத்தை முன்னிட்டு, இராணுவத் தளபதியால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே, ​மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

“அனைத்து இலங்கையர்களும், தற்காலத்தில் அனுபவித்து வரும் சுதந்திரத்துக்காக, இராணுவத்தின் 23,962 பேரும் கடற்படையின் 1,160 பேரும், விமானப் படையின் 443 பேரும், பொலிஸில் 2,568 பேருரும், சிவில் பாதுகாப்புப் படையின் 456 பேரும், தாய் நாட்டுக்காகப் போராடும்போது, உயிர்த் தியாகம் செய்தனர்.

 இவ்வாறாகப் பெறப்பட்ட வெற்றியை, குறுகிய நோக்கத்துக்காகவும் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காகவும் பயன்படுத்தக் கூடாது” என்றும், இராணுவத் தளபதி, தனது அறிக்கையினூடாக வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, யுத்தத்தில் உயிரிழந்த படையினரை நினைவுகூர்வதற்காக, இராணுவத்தினரால் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், ஜனாதிபதி ​தலைமையில், நாளை மறுதினம் (19), தேசிய இராணுவ ஸ்தூபிக்கு அருகில், தேசிய போர் வீரர்கள் நினைவுதினம் அனுஷ்டிக்கப்படுமெனவும் அன்றைய தினமே, களனி ரஜமஹா விகாரையில், ஆலோக்க (விளக்கு) பூஜையொன்றும் மேற்கொள்ளப்படுமென, மேலும் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X