2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

‘46 சதவீதத்தால் புகைத்தல் குறைந்தது’

Editorial   / 2017 செப்டெம்பர் 14 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

“புகைப்பொருட்கள் மீதான வரிவிதிப்பால், இந்த நாட்டில் தற்​போதைக்கு 46 சதவீதத்தால் புகைத்தல் குறைந்துள்ளது” என்று, சுகாதாரம் ஊட்டச்சத்து மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

“புகைத்தல் பாவனையை இன்னுமின்னும் குறைப்பதற்காக, பாடசாலைகளுக்கு அண்மையில், புகைப்பொருள்கள் விற்பனை செய்வதை தடைசெய்தல், தனியான புகைப்பொருள் விற்பனையை தடைசெய்தல், வௌ்ளை நிறத்திலான புகைப்பொருள் பக்கெட்டை அறிமுகம் செய்தல், உள்ளிட்ட சட்டங்களை எதிர்காலத்தில் அறிமுகப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

“இதேவேளை, 2020ஆம் ஆண்டில், புகைப்​பொருள் உற்பத்தியை நாட்டிலிருந்து முற்றாக தடைசெய்வதற்கு, அரசாங்கம் கொள்ளையளவில் தீர்மானித்துள்ளது.  

அந்த தீர்மானத்தை செயற்படுத்துவதற்கு, புகைப்பொருள் நிறுவனங்களும் தீர்மானித்துள்ளன” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .