2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘564,288 சிறுவர்களுக்கு போஷாக்கு இல்லை’

Editorial   / 2017 ஜூலை 07 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

“இலங்கையிலுள்ள சிறுவர் சனத்தொகையில், 5 இலட்சத்து 64 ஆயிரத்து 288 சிறுவர்கள், போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது சிறுவர் சனத்தொகையில், 36.1 சதவீதமானதாகும்” என்று, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். 

நாடாளுமன்றத்தில் நேற்று (06) இடம்பெற்ற, வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, ஒன்றிணைந்த எதிரணியின் எம்.பியான வாசுதேவ நாணயக்கார, போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை தொடர்பில் கேள்விகளைக் கேட்டிருந்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (06) இடம்பெற்ற, வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, ஒன்றிணைந்த எதிரணியின் எம்.பியான வாசுதேவ நாணயக்கார, போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை தொடர்பில் கேள்விகளைக் கேட்டிருந்தார். 

அக்கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் ராஜித, “போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்கள் தொடர்பில், 2016ஆண்டே கணக்கெடுக்கப்பட்டது.  

“அதன்பிரகாரம், வயதுக்கேற்ப நிறையைக் கொண்டிராத சிறுவர்களின் எண்ணிக்கை 243,066 ஆகும். இது சிறுவர் சனத்தொகையில், 15.6 சதவீதமாகும். வயதுக்கேற்ப பருமன் குறைந்த சிறுவர்களின் எண்ணிக்கை 143,955 ஆகும். இது 9.2 சதவீதமாகும். அத்துடன், உயரத்துக்கேற்ப பருமனைக் கொண்டிராத சிறுவர்களின் எண்ணிக்கை 177,267 ஆகும். சிறுவர் சனத்தொகையில் 1.3 சதவீதமாகும்” என்றார். 

இடையீட்டுக் கேள்வியை எழுப்பிய வாசுதேவ நாணயக்கார எம்.பி, “மேலே குறிப்பிட்ட சிறுவர்களின் எண்ணிக்கை, சமூகத்தின் ஒவ்வொரு வருமான மட்டங்கள் வாரியாகத் தனித்தனியாக தரமுடியுமா?” என்று வினவினார். 

“அந்த அடிப்படையில், கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை” என்று தெரிவித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன, “எதிர்காலத்தில், மேற்குறிப்பிட்ட விடயத்தையும் உள்ளடக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .