2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீட்டிப்பு

Editorial   / 2020 மே 28 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட, குருவிட்ட, கலவான, இரத்தினபுரி, ஓப்பநாயக்க, பெல்மடுல்ல, பலாங்கொடை, நிவித்திகல, எலபாத்த, கிரியெல்ல ஆகிய பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டத்தின் புளத்கொஹூபிட்டிய, தெரணியகல, தெஹியோவிட்ட மற்றும் யட்டியாந்தோட்டை பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனை தவிர நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ கோரளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கும் இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

காலி மாவட்டத்தின் நெலுவ மற்றும் தவளம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவிற்குபட்ட பகுதிகளுக்கும் இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இரத்தினபுரி மாவட்டத்தின் கொடக்கவெல்ல, கஹவத்த, கொலன்ன ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க, கலிகமுவ, கேகாலை, இறம்புக்கனை மற்றும் மாவனெல்ல பகுதிகளுக்கும் முதல்நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தின் கங்க இஹல கோரளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கும் முதல்நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

மேலும், காலி மாவட்டத்தின் நியாகம பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கும் களுத்துறை மாவட்டத்தின் ஹொரணை, இங்கிரிய மற்றும் புளத்சிங்கள பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின் கொட்டபல பகுதிக்குள் முதல் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .