2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பாலியல் தொழிலை சட்டரீதியாக்குமாறு யோசனை

Menaka Mookandi   / 2012 நவம்பர் 20 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்காக பாலியல் தொழிலை சட்டரீதியான தொழிலாக மாற்றுமாறு தென் மாகாணசபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் அஜித் பிரசன்னவினால் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த யோசனையானது தென் மாகாணசபையின் யோசனையாவே முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த தொழிலுக்கு உள்நாட்டில் ஆளணி குறைபாடு காணப்படின் வெளிநாடுகளிலிருந்து அதற்காக பணியாளர்களை வருவிக்குமாறும் அந்த யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்கனவே சுமார் 40 ஆயிரம் பேர் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் மாகாணசபை உறுப்பினர் தனது யோசனையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுற்றுலாத்துறையின் எஸ் 3 வேலைத்திட்டத்தில் உள்ளடங்கும் கடல் மற்றும் சூரிய ஒளி திட்டத்துக்குள் தனது யோசனை உள்ளடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மாகாணசபை நிதியொதுக்கீட்டின் கீழ் தென்கொரியா உள்ளிட்ட சில நாடுகளில் சுற்றுலாத்துறை அபிவிருத்திக்காக அண்மையில் இந்த தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதையும் அவர் தனது யோசனையில் சுட்டிக்காட்டியுள்ளார். (நிமல் அல்கெவத்த)

You May Also Like

  Comments - 0

  • k.Balendran Tuesday, 20 November 2012 06:55 AM

    சபாஷ் சரியான யோசனை. இப்ப அது ஒன்றுதான் இல்லாத குறை.

    Reply : 0       0

    kuru Tuesday, 20 November 2012 07:33 AM

    நல்ல சிந்தனை. உமது குடும்பத்தில் இருந்து ஆரம்பிக்கலாம்.

    Reply : 0       0

    ahr Tuesday, 20 November 2012 08:02 AM

    ஒரு யோசனை முன் வைக்கும் போது அதன் தாக்கத்தை பல கோணங்களில் ஆராய வேண்டும். இந்த முடிவு எடுக்கப்படுமானால் நாட்டின் அழிவை யாரலும் தடுக்க முடியாது. இந்தொனேசியாவுக்கு வந்தது போன்ற சுனாமி இலங்கைக்கு வரும் என்பதில் சந்தேகம் இல்லை.

    Reply : 0       0

    neethavaan Tuesday, 20 November 2012 10:50 AM

    இந்த நாட்டைக் கெடுக்கப் பார்க்கின்றீர்களா?

    Reply : 0       0

    OBAMA Tuesday, 20 November 2012 10:55 AM

    முதலில் உங்கள் குடும்பத்திலிருந்தும் உறவினர்களிடமிருந்தும் ஆரம்பியுங்கள்...

    Reply : 0       0

    rima Tuesday, 20 November 2012 02:05 PM

    சபாஷ் சரியான யோசனை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .