2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச்சென்ற சந்தேகநபருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம்

Editorial   / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, மொறவெவ  பகுதியில் சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச்சென்ற சந்தேக நபருக்கு, 50 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறு, இன்று (11) திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க உத்தரவிட்டார்.

இவ்வாறு தண்டம் அறவிடப்பட்டவர் கந்தளாய், லைட் வீதியை ச்சேர்ந்த சந்திராபதி தேதர திமுது தாரக்க வீரசிங்க (43 வயது) எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

மொரவெவ குளத்துக்கு அருகில் உழவு இயந்திரத்தில் அனுமதிப்பத்திரமின்றி, மணல்  ஏற்றுவதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலை அடுத்து பொலிஸார் சுற்றிவளைத்தபோது, இயந்திரத்துடன் சாரதி ஒருவரை கைது செய்ததாகவும், அதனை அடுத்து இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்திய தாகவும் மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

சட்டவிரோதமாக மொரவெவ  பகுதிகளில் குளங்களிலும் ஆறுகளிலும் மணல் ஏற்றி வருவதாகத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதால், சட்டவிரோத செயற்பாடுகளில் இனிவரும் காலங்களில் ஈடுபட வேண்டாமெனவும் பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .