2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அனுமதி கிடைக்கும்வரை முற்பணம் செலுத்த வேண்டாம்

Suganthini Ratnam   / 2016 மே 23 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்
 
இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்குச் செல்வோர் தமது அனுமதி கிடைக்கும்வரை முகவர்களிடம் முற்பணம் செலுத்த வேண்டாம் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் கலாசாரத் திணைக்கள ஹஜ் குழுத் தலைவர் கலாநிதி சியாத் தாஹா தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்திலிருந்து ஹஜ் யாத்திரை செல்வோருக்கான விழிப்புணர்வுச் செயலமர்வு, கிண்ணியா பொதுநூலகக் கேட்போர் கூடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.

ஹஜ் கடமைக்கான கட்டணம் எவ்வளவு என்பதை பத்திரிகை மூலம் அறிவிக்கப்படும். இதற்காக முகவர்களிடம் கேள்விப்பத்திரம் கோரிய நிலையில், அது கிடைத்துள்ளது. கிட்டத்தட்ட 95 முகவர்கள் விண்ணப்பித்துள்ளார்கள். மூன்று இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் முதல்  நான்கு இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வரை அவர்கள் விண்ணப்பித்துள்ளார்கள். குறித்த முகவர்களையும் அவர்கள் விண்ணப்பித்த கட்டணத் தொகைகளையும் தேசிய பத்திரிகைகளில் அறிவிக்கப்படும். உங்களுக்குப் பொருத்தமானதை நீங்கள் தெரிவுசெய்து கொள்ளலாம் எனவும் அவர் கூறினார்.

2,240 பேருக்கான ஹஜ் கோட்டா இதுவரையில் கிடைத்துள்ளது. இறுதியில் 800 பேருக்கு கோட்டா கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த வருடம் ஒரு முகவருக்கு குறைந்தது 50 பேரையும்; கூடியது 100 பேரையும்; கொண்டு செல்வதற்கு அனுமதி அளிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .