2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இராட்சத குளவிக் கூட்டால் அச்சநிலை

Thipaan   / 2016 ஜூலை 20 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில், மகரு கிராம நீர்த்தாங்கியிலும் நீர்த்தாங்கிக்கு அருகிலுள்ள மஞ்ச வர்ண மரத்திலும் இராட்சத குளவிகள் (பம்பரையான்) குடி கொண்டுள்ளதால் தாம் அச்சத்துக்கு மத்தியில் வாழ்வதாக அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இப்பகுதியில் பாடசாலை, அன்வர் ஜும்ஆ பள்ளி ஆகியன  அமைந்துள்ளதால், பாடசாலை செல்லும் மாணவர்களையும் பாதையில் பயணிக்கும் பொதுமக்களையும் குளவிகள் கொட்டுகின்றன.

இதுவரையில் குளவிக் கொட்டுக்குள்ளான ஐந்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.

அத்துடன் இது தொடர்பாக உரிய அதிகாரிகளிடம் முறையிடப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, இதனை உரிய அதிகாரிகள் கவனத்தில் கொண்டு குறித்த குளவிக் கூடுகளை அவ்விடத்திலிருந்து, பாதுகாப்பாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச மக்கள்  கோரிக்கை விடுக்கின்றனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .