2024 மார்ச் 28, வியாழக்கிழமை

உல்பத்தக்குளம் உடைப்பெடுப்பு

Suganthini Ratnam   / 2016 மே 22 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்,பதுர்தீன் சியானா

திருகோணமலை, தம்பலகாமம் மேற்குப் பகுதியிலுள்ள உல்பத்தக்குளம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை உடைப்பெடுத்துள்ளது.  

200 ஏக்கர் கன அடி நீரைக் கொள்ளக்கூடியதாக இக்குளத்தில் தேக்கி வைக்கப்பட்டிருந்த நீர் முற்றாக வெளியேறியுள்ளது. இந்நிலையில், இக்குளத்திலிருந்து வெளியேறுகின்ற நீர் அருகிலுள்ள புலியூற்றுக்குளத்தில் தேக்கி வைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இக்குளமும் நிறையும் பட்சத்தில் அருகிலுள்ள ஜெயபுரம், பத்தினிபுரம் ஆகிய கிராமங்கள் பாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே, இக்கிராமங்களைச் சேர்ந்த மக்களை  அவதானமாக இருக்குமாறு பொலிஸாரும் பிரதேச செயலக அதிகாரிகளும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேற்படி குளம் உடைப்பெடுத்தமையைத் தொடர்ந்து, தம்பலகாமம் பிரதேச  செயலாளர் திருமதி ஜெயா ஸ்ரீபதி நேரில் சென்று உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டார். மேலும், நிலைமையைச் சமாளிக்க பாதுகாப்புக் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இக்குளம் உடைப்பெடுத்தமையால் 10 ஏக்கர் வயற்காணி பாதிக்கப்பட்டுள்ளது. குளத்தை நம்பி விவசாயம் மேற்கொள்ளும் 60 ௭0 ஏக்கர் நிலங்க​ளில் விவசாயத்தை மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும் தம்பலகாமம் பிரதேச  செயலாளர் திருமதி ஜெயா ஸ்ரீபதி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X