2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

'எதிர்க்கட்சித் தலைவர் பதவியை மக்களின் நலனுக்காக பயன்படுத்த இரா.சம்பந்தன் முன்வர வேண்டும்'

Suganthini Ratnam   / 2016 மார்ச் 30 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-றியாஸ் ஆதம்

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை நாட்டினதும் நாட்டு மக்களினதும் நலனுக்காக சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கு இரா.சம்பந்தன் முன்வர வேண்டுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.

மேலும், இந்த நாட்டிலுள்ள சிறுபான்மையின மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் முன்வர வேண்டுமெனவும் அவர் கூறினார்.

கிழக்கு மாகாண சபை அமர்வு, திருகோணமலை மாவட்டத்திலுள்ள மாகாணசபை அலுவலகத்தில்;  செவ்வாய்க்கிழமை (29) நடைபெற்றது. இதன்போது, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மெத்தானந்த டீ சில்வா முன்வைத்த மாகாண சபை உறுப்பினர்களின், உத்தியோகஸ்தர்களின் சம்பள அதிகரிப்பு சம்பந்தமான பிரேரணையின் மீது உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கிடைத்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வாய்ப்பாகப் பயன்படுத்தி, அவர் நாட்டுக்காகவும் நாட்டு மக்களின் நலனுக்காகவும் பேச வேண்டிய சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது' என்றார்.

'எமது நாட்டிலுள்ள ஒன்பது மாகாண சபைகளில் ஏனைய எட்டு மாகாண சபைகளுக்கும் வழங்கப்படுகின்ற சலுகைகள் கிழக்கு மாகாண சபைக்கு வழங்கப்படுவதில்லை. குறிப்பாக, ஏனைய எட்டு மாகாண சபைகளினதும் உறுப்பினர்கள், உத்தியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் சம்பள அதிகரிப்பு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள்,  உத்தியோகஸ்தர்களுக்கு வழங்கப்படவில்லையெனின், இதற்கு யார் பொறுப்பு என்பதை கிழக்கு மாகாண முதலமைச்சர் இச்சபையில் தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறான நிலைமை எமது மாகாணத்திலும் மாகாண சபை உறுப்பினர்கள், உத்தியோகஸ்;தர்களுக்கும் ஏற்படுமானால் இதனைக்கூட பெற்றுக்கொடுக்க முடியாத, கையாளாகாத மாகாண சபை உறுப்பினர்;களாகவே நாங்கள் இருக்க வேண்டி ஏற்படும்' என்றார்.

'கடந்த மாகாண சபை உறுப்பினர்களின் கூட்டத்தின்போது, மாகாண சபை உறுப்பினர்களின் உரிமைகள், சலுகைகள் தொடர்பாக இருபது அம்சக் கோரிக்கைகள் முன்வைத்து பேசப்பட்டது. அவைகளில் ஒன்றுகூட இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை' என்றார்.  

'கிழக்கு மாகாண மக்களின்  காணிப் பிரச்சினை, கல்விப் பிரச்சினை, விவசாயிகளின் பிரச்சினை உள்ளிட்டவை  தொடர்பாக இந்தச் சபையில் பேசப்படுகிறது. இப்பிரச்சினைகளில் ஒன்றுகூட இதுவரையில் தீர்ந்ததாகத் தெரியவில்லை. எனவே, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நாட்டு மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்;' எனவும் அவர் மேலும் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .