2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஐ.நா பிரதிநிதிகளுடன் முதலமைச்சர் சந்திப்பு

Niroshini   / 2015 ஒக்டோபர் 05 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்,எப்.முபாரக்  

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதிகள் குழுவினருக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதில்,கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், கல்வி அமைச்சர் சி. தண்டாயுதபாணி, மாகாண பிரதம செயலாளர் அபேய குணவர்த்தன, அரசாங்க அதிபர், ஏ.ஏ. புஸ்பகுமார உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 இச்சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண சபை முதலமைச்சர்,

சம்பூர் மீள் குடியேற்ற திட்டம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புக்களினால்
முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்களை துரிதமாக முன்னெடுக்குமாறும் கிழக்கு மாகாணத்தில் உள்ள இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை அதிகரிப்பதற்காக தொழில் பயிற்சி கூடங்கள் என்பன நிறுவுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும், வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக கிழக்கில் இருந்து செல்லுவோரின் தொகையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றார்.

மேலும், கிழக்கில் நிலவி வரும் பிரச்சினைகளுக்கான தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அதற்கான ஒத்துழைப்புக்களை ஜ.நா பிரதிநிதிகளிடம் கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .