2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘சிறுபான்மையினருக்கு சிக்கல்’

Editorial   / 2020 மார்ச் 10 , பி.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

கல்வியை மேம்படுத்தும் நன்  நோக்கத்தில் உருவாக்கப்பட்ட பெற்றி கம்ப​ஸை எதுவித  ஒப்புதலையும் பெறாது, அரசு  ஆக்கிரமித்திருப்பது, கிழக்கு வாழ் சிறுபான்மையன மக்களுக்கு சிக்கலைம் தோற்றுவிக்குமென, கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி தெரிவித்தார்.

கிழக்கு மாகாணம் கல்வித் தரத்திலே  கீழ் நிலையில்  இருக்கும் இத்  தருணத்தில்,  இவ்வாறான அரசாங்சத்தின்  செயட்பாடுகளை,   கிழக்கு வாழ் சிறுபான்மை சமூகத்தை சிக்கலுக்குள்ளாக்கும்  இன ரீதியான  செயட்பாடாகவே பார்க்க வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், “மேற்படி நிறுவனம்,  கல்வியை மேம்படுத்தும் நோக்கத்தில், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் எடுக்கப்பட்ட தொடர் முயட்சியின் பலனாக,  வெளிநாட்டு நிதி அனுசரணையை பெற்று  நிறுவப்பட்ட  பாரிய நிறுவனமாகும்.

இங்கு  கல்வி நடவடிக்கைகளை இதுவரை  ஆரம்பித்திருக்காத  நிலையில், தற்போது அரங்கேற்றப் பட்டிருக்கும்  இவ்வாரான ஆக்கிரமிப்புச்  செயற்பாடுகள் அந் நிறுவனத்துக்கும், அதை அமைப்பதற்காக  நிதி வழங்கிய அனுசரணையாளர்களுக்கும் பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.  

“அத்தோடு, எதிர்காலத்தில் இவ்வாறான திட்டங்களுக்கு  நிதி அனுசரணை பெறுவதையும்  கேள்விக் குறியாக்கி இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X