2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சுகாதாரப் பணியாளர்களுக்கு நியமனம் வழங்க நடவடிக்கை

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 26 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

கிழக்கு மாகாணத்தில் சுமார் 09 வருடங்களாக எந்தவித வேதனமுமின்றி பணியாற்றி வருகின்ற சுகாதாரப் பணியாளர்களுக்கு நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.

பல வருடங்களாக எந்தவித வேதனமுமின்றி பணியாற்றுகின்ற சுகாதாரப் பணியாளர்களுக்கு நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு திருகோணமலையிலுள்ள சுகாதார அமைச்சில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரிடம் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.ஆர்.அன்வர் கோரிக்கை விடுத்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர், 'திருகோணமலை மாவட்டத்திலுள்ள சுமார் 30 இளைஞர், யுவதிகள் சுமார் 09 வருடங்களாக வைத்தியசாலைகளிலும் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களிலும் சுகாதாரப் பணியாளர்களாக பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு நியமனங்கள் வழங்குவதற்குரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்றார்.

இதற்குப் பதிலளித்த மாகாண சுகாதார அமைச்சர், 'அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலுள்ள நூற்றுக்கணக்கான இளைஞர், யுவதிகள் கடந்த பல வருடங்களாக சுகாதாரப் பணியாளர்களாக பணியாற்றுகின்றமை தொடர்பில் அறிந்துள்ளேன். இவர்களுக்கு நியமனங்களை வழங்குவது தொடர்பில் என்னாலான சகல நடவடிக்கைகளும்  முன்னெடுக்கப்படும். இந்த விடயம் தொடர்பில் அமைச்சின் செயலாளர்கள், உயரதிகாரிகள் உள்ளிட்டோருடன் கலந்துரையாடப்படும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .