2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

திருகோணமலையில் 'சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய விசேட திட்டங்கள்'

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 15 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொன் ஆனந்தம், வடமலை ராஜ்குமார்

எதிர்வரும் 2017ஆம் ஆண்டு முதல் திருகோணமலை மாவட்டத்தில்  சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு விசேட திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார தெரிவித்தார்.  

2016ஆம் ஆண்டுக்கான மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இறுதிக் கூட்டம், மாவட்டச் செயலகத்தில் இன்று (15) நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கிழக்கு மாகாண சபையுடன் இணைந்து இதற்கான திட்டமிடல்; மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.  
இங்கு அவர் மேலும் தெரிவித்தபோது, 'பல்வேறு நாடுகள் சுற்றுலாத்துறை மூலம் அபிவிருத்தி அடைந்துவரும் நிலையில், அதன் மூலமான தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அவ்வாறே, எமது மாவட்டத்திலும் இதற்கான முயற்சியை எடுத்து தொழில் வாய்ப்புகளை அதிகரிப்பதற்குத்  திட்டமிடப்பட்டுள்ளது.

எமது மாவட்டத்தில் விவசாயத்துறை பல்வேறு பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளது. அந்த வகையில், இம்மாவட்டத்தில் வறுமை ஒழிப்பு மற்றும் தொழில் வாய்ப்புகளை  ஏற்படுத்த வேண்டிய தேவை மேலும் அதிகரித்துள்ளது. எனவே, இம்மாவட்டத்திலுள்ள இளைஞர், யுவதிகளின் தொழில் பிரச்சினைகளையும் வறுமையையும் குறைக்கும் வகையிலும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .