2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

'நல்லாட்சியில் புறக்கணிப்புகள் இடம்பெறாது'

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 26 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கடந்த காலத்தில் கிழக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகள் மத்திய சுகாதார அமைச்சினால் புறக்கணிக்கப்பட்டன. ஆனால், இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் இவ்வாறான புறக்கணிப்புகள் எதுவும் இடம்பெறாதென்ற நம்பிக்கை உள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் தெரிவித்தார்.

காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் ஏ.எல்.டீன் பைறூஸ் மற்றும் செயலாளர் எம்.எச்.எம்.அன்வர் உள்ளிட்டோர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரை அவரது பிராந்திய அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை சந்தித்தபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், 'கடந்த காலத்தில்; கிழக்கு மாகாணத்தில் சுகாதாரத்துறை அபிவிருத்திக்காக மத்திய சுகாதார அமைச்சினால் தேவையான நிதி வளம்; வழங்கப்படாமல், வைத்தியசாலைகள் புறக்கணிக்கப்பட்டன. இதனால், இம்மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகள் வளப்பற்றாக்குறை உள்ளிட்ட குறைபாடுகளுடன் இயங்குகின்றன'

'நல்லாட்சி அரசாங்கத்தில் அடுத்த வருட வரவு -செலவுத்திட்டத்தில் கூடுதலான நிதி சுகாதாரத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இவ்வாறான குறைகள் ஏற்படாதென நினைக்கிறேன். எனவே, கிழக்கு மாகாண சுகாதாரத்துறையின் அபிவிருத்திக்கும்  பெருந்தொகை நிதி அடுத்த வருடத்துக்காக மத்திய அரசினால் ஒதுக்கீடு செய்யப்படும். இதன்போது, கிழக்கு மாகாணத்திலுள்ள சுகாதாரத்துறை அபிவிருத்தி செய்யப்படுவதுடன், இங்குள்ள  வைத்தியசாலைகளுக்குத் தேவையான வளங்கள் ஓரளவுக்கேனும் பெற்றுக்கொடுக்கப்படும்' என்றார்.  

'அடுத்த வருடம் இம்மாகாணத்தில்  சுகாதாரத்துறையில் செய்யவேண்டிய திட்டங்களை இம்மாகாணசபை உறுப்பினர்களிடம் கோரியுள்ளேன். அவர்களிடமிருந்து திட்டங்களைப் பெற்று மாகாண முதலமைச்சர் மற்றும் மாகாண அமைச்சர்களின் ஆலோசனையைப் பெற்று அதனை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளேன்.

மேலும், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக நான் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, இம்மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளுக்குச் சென்று குறைகளை கேட்டு அவைகளை நிவர்த்தி செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறேன்.
எதிர்காலத்தில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் காணப்படும் குறைகளையும் நிவர்த்தி செய்து அதற்கு தேவையான வளங்களையும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பேன்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .