2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பத்திரிகைகளில் செய்தி வெளிவருவதால் எந்தப்பயனும் இல்லை

Niroshini   / 2016 மார்ச் 29 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                   

“பிரேரணைகள் முன்மொழியப்பட்டு அது ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் வருவதால் எந்தவிதமான பிரயோசனமும் பொதுமக்களுக்கு கிடைக்கப் போவது இல்லை அது சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்” என கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஜே.எம்.லாஹீர் தெரிவித்தார்.        

கிழக்கு மாகாண சபையின் 56ஆவது அமர்வு இன்று செவ்வாய்கிழமை, கிழக்கு மாகாண சபையின் சபை கேட்போர் கூடத்தில் தவிசாளர் சந்திரதாச கலப்பதி தலைமையில் நடைபெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.                   

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தில் மூன்று படைப்பிரிவைச் சேர்ந்தோர் தனியாரின் காணிகளை கையகப்படுத்திக் கொண்டு தமது செல்வாக்குகளை செலுத்தி வருகின்றார்கள். இவ்வாறான செயற்பாடுகள் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு தனியாரின் பத்து ஏக்கருக்கும் மேல் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஹபிப்நகர், தக்வாநகர் மற்றும் வட்டம் போன்ற பகுதிகளின் கடற்படையினரின் ஆதிக்கம் தனியாரின் காணிகள் மேல்தான் இருந்து கொண்டிருக்கின்றது.

இப்பிரதேசத்தின் துறைமுகத்தினை அண்டிய பகுதிகளிலுள்ள தனியாரின்  அனைத்து காணிகளும் கையகப்படுத்தப்பட்டே வருகின்றது. மூதூர் துறைமுகப்பகுதியுள்ள அனைத்து காணிகளும் பிரதேசமும் விடுவிக்கப்பட வேண்டும்.

கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் தனியாரின் காணிகள் நாளாந்தம் பறிபோகிக்கொண்டே இருக்கின்றது. இவ்வாறான தனியாரின் காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ளும் படையினரின் ஆதிக்கத்தினை கிழக்கு மாகாண சபையின் மூலம் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

அதற்காக வேண்டி மக்களின் நலன்களை கருத்திற்கொண்டு இவ்வாறான காணி அபகரிப்புகள் நிறுத்தப்பட வேண்டும், மாகாண காணிச் சட்டங்கள் மீளமைக்கப்பட வேண்டும், கிழக்கில் படையினரின் ஆதிக்கத்தில் இருக்கும் அனைத்து காணிகளும் மீள ஒப்படைக்கப்படல் வேண்டும் என்றார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .