2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

புதிய பஸ்களுக்கு அனுமதி வழங்கியதால் 'கிழக்கு மாகாண தனியார் பஸ் உரிமையாளர்கள் பாதிப்பு'

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 21 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

விதி முறைகளுக்கு புறம்பாகப் புதிய பஸ்களுக்கு வழித்தட அனுமதி வழங்கியதால், கிழக்கு மாகாண தனியார் பஸ் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

2017ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாணசபையின் வரவு –செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து,  மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபை தொடர்பான விவாதம் நடைபெற்றது. இவ்விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'கிழக்கு மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபையால் அனுமதி வழங்கப்பட்டு, கல்முனையிலிருந்து வாகரை ஊடாக திருகோணமலைவரை ஏராளமான பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், இவற்றுக்குப் புறம்பாக எவ்வித விதி முறைகளையும் பின்பற்றாமல் மேலும் சில பஸ்களுக்கு கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது. இதன் காரணமாக ஏற்கெனவே சேவையில் ஈடுபட்டுவரும் பஸ் உரிமையாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்' என்றார்.

இந்த விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் முதலமைச்சின் செயலாளருக்கும்; கிழக்கு மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவருக்கும் கிழக்கு மாகாண பஸ் உரிமையாளர் சங்கம் பல தடவைகள் அறிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை' என்றார்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .