2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

பிரதான கதவை மூடி மாணவர்கள் பகிஷ்கரிப்பு

Niroshini   / 2016 மார்ச் 23 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, குச்சவெளி பிரதேசத்திலுள்ள மூன்று பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் இன்று புதன்கிழமை காலை அந்நூரியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பிரதான கதவை மூடி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

ஆசிரியர்களை நியமிக்குமாறு கோரி, கடந்த 03ஆம் திகதி அந்நூரியா முஸ்லிம் மகா வித்தியாலயம் ,அந்நூரியா கனிஷ்ட வித்தியாலயம்  மற்றும் இலந்தைக்குளம் முஸ்லிம் வித்தியாலயம் ஆகிய மூன்று பாடசாலைகளைச் சேர்ந்த 1000ற்கும் மேற்பட்ட மாணவர்களும் பெற்றோர்களும் தொடர்ச்சியாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனையடுத்து, 10ஆம் திகதி கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், திருகோணமலை வலய கல்விப் பணிப்பாளர், குச்சவெளி பொலிஸ்  பொறுப்பதிகாரி மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் கூட்டாக சேர்ந்து கலந்துரையாடலொன்றை மேற்கொண்டனர்.

அக்கலந்துரையாடலில் கடந்த 16ஆம் திகதிக்கு முன்னர் ஆசிரியர் வெற்றிடத்தை நிரப்புவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டும் இன்று வரை ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என மாணவர்கள் தெரிவித்தனர்.
'தமது பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்காவிட்டால் பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர்களை உள்ளே விடமாட்டோம்' என தெரிவித்து பாடசாலையின் பிரதான கதவை  பூட்டி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X