2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

முஸ்லிம்களுக்கு தனியான நிர்வாக அலகு ஏற்படுத்த வேண்டும்

Niroshini   / 2016 மார்ச் 22 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

'இனப் பிரச்சினைத் தீர்வின்போது வடக்கு - கிழக்கு இணைந்த சமஷ்டி முறையிலான அதிகார பரவலாக்கலில் முஸ்லிம்களுக்கென தனியான நிர்வாக அலகொன்றும் ஏற்படுத்தப்பட வேண்டும்' என முன்வைக்கப்ட்ட தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

டெலோ தலைவரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் திருகோணமலையில் இடம்பெற்ற  டெலோவின்  9வது தேசிய மாநாட்டிலேயே, இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக இம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் குறிப்பாக வடக்கு, கிழக்கு இணைப்பையும் சமஷ்டி அடிப்படையிலான தீர்வையும் வலியுறுத்தப்பட்டது.

இந்தத் தீர்மானங்கள் தொடர்பாக கட்சியின் பிரதித் தலைவர் ஹென்றி மஹேந்திரன், திங்கட்கிழமை(21) மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

'வடக்கு  - கிழக்கு இணைப்பில்  முஸ்லிம்களை பெருன்பான்மையாக கொண்ட  நிலத் தொடர்புடைய முஸ்லிம் பிரதேசங்களை  உள்ளடக்கியதாக சுயாதீன நிர்வாக அலகு ஏற்படுத்தப்பட வேண்டும்.

அதேபோல், மலையகத்திலும் சுயாட்சி பிரதேசங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
'தமிழ் அரசியல் கைதிகளில் பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அவசரகால சட்ட விதிகளின் கீழ் 10 வருடங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும்.

புனர்வாழ்வு  பெற விரும்புபவர்கள் புனர்வாழ்வு  அளிக்கப்பட்டு விடுதலை  செய்யப்பட வேண்டும். வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் வழக்கு விசாரனைகள் துரிதமாக முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.

யுத்தக் குற்றம் தொடர்பாக ஐ. நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி சர்வதேச பங்களிப்புடனான  நீதி விசாரணைக்கு ஏதுவான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் துரிதமாக மேற்கொள்ள வேண்டும்'  என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .