2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ராஜபக்‌ஷவுக்கு கண்டனம்

Editorial   / 2020 மார்ச் 02 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எம்.ஏ.பரீத்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதளுக்கான  ஜனாதிபதி விசாரணை  ஆணைக்குழுவில்  வாக்குமூலம் அளித்த விஜேதாச ராஜபக்‌ஷ, இலங்கை முஸ்லிம்கள் குறித்தும் ஜம்மிய்யதுல் உலமா குறித்தும்  தெரிவித்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானதும் கண்டனத்துக்குரியதும் என கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாட்டின் முஸ்லிம்களையும், ஜம்மியத்துல் உலமாவையும் தங்களுடைய அரசியல் இலாபத்துக்காக பொய்க்  குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, கொச்சைப் படுத்துவதோடு,  பெரும் பான்மை சமூகத்திடம் இருந்து முஸ்லிம்களை மேலும்  அந்நியப்படுத்தும் செயலை இனிமேலும்  செய்ய  வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

“தேர்தல்கள்  நெருங்கும் இத் தருணத்தில், உங்களது  அரசியல் வங்குரோத்து நிலைமயை பாதுகாப்பதடற்காக பொய்களைக் கூறி,  அப்பாவி சமூகத்தை பலிகொடுக்க முயட்சிக்க வேண்டாம் எனவும்  கூறி,  வன்மையான கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .